கேரளாவில் படகு இல்லம் மூழ்கி விபத்து – ஒருவர் பலி, 4 பேருக்கு சிகிச்சை

கேரளாவில் முக்கிய சுற்றுலாத் தளமாக ஆலப்புழா திகழ்கிறது. இந்த சுற்றுலா தளத்திற்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து ராமசந்திர ரெட்டி என்ற நபர் தனது மகன் ரஜேஷ் ரெட்டி உறவினர் நரேந்தர், நரேஷ் ஆகியோருடன் ஆலப்புழாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அதன் பிறகு படகு இல்லம் ஒன்றை புக் செய்து இரவை அதில் கழித்துள்ளனர். அந்த படகு இன்று அதிகாலை 4 மணி அளவில் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது. இதனால் படகுக்குள் இருந்த 5 பேரும் நீரில் மூழ்கினர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் நீரில் மூழ்கிய 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராமசந்திரா ரெட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மீதமுள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.