Connect with us

Raj News Tamil

யோகிபாபுவின் மிகவும் எதிர்பார்ப்புக்கு உரிய திரைப்படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..

சினிமா

யோகிபாபுவின் மிகவும் எதிர்பார்ப்புக்கு உரிய திரைப்படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..

வித்தியாசமான கதைகளை எழுதி, இயக்கி வருபவர் இயக்குநர் சிம்பு தேவன். இவர், இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூனு களவானிகளும், புலி என்று பல்வேறு வித்தியாசமான படைப்புகளை இயக்கியிருக்கிறார்.

சிம்பு தேவன், தற்போது நடிகர் யோகி பாபுவை ஹீரோவாக வைத்து, போட் என்ற படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானபோது, ரசிகர்கள் பலரும் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல், தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்டு 2-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

More in சினிமா

To Top