இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், புலி, கசடதபற, ஒரு கன்னியும் 3 களவானிகளும் என்று வித்தியாசமான படைப்புகளின் மூலம் கவனிக்க வைத்தவர் சிம்புதேவன்.
இவர் தற்போது போட் என்ற திரைப்படத்தை இயக்கி, தன்னுடைய சொந்த நிறுவனம் மூலம், தயாரித்தும் வருகிறார். யோகிபாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த் என்று பலர் நடித்துள்ளனர்
போட் பயணத்தின்போது நிகழும் சுவாரசியங்களை, காமெடியோடு சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.