மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் மெய்டி மற்றும் கூகி பழங்குடியின சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் 180 பேர் உயிரிழந்தனர்.
வன்முறையில் பலியான அடையாளம் காணப்பட்ட 88 பேரின் உடல்களை, இம்மாதம் 11ம் தேதிக்குள் அடக்கம் அல்லது தகனம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் 64 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் நேற்று முறைப்படி வழங்கப்பட்டன.
கூகி சமூகத்தைச் சேர்ந்த மேலும் 24 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.