கமலின் இந்தியன் – 2 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்..!

விக்ரம் படத்திம் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து கமல் நடித்துவரும் திரைப்படம் இந்தியன் – 2.. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்தின், படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சித்தார்த், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, பிரியா பவனி சங்கர் என ஒரு திரைப்பட்டாளமே நடிக்கும் இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் குல்சான் குரோவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கமஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடிப்பது உற்சாகமாக இருப்பதாக குல்சன் குரோவர் ட்வீட் செய்துள்ளார்.