ஆபத்தில் இருக்கும் பாலிவுட் சினிமா?

இந்தியாவிலேயே அதிக வசூல் சாதனை புரிந்து வந்தது பாலிவுட் சினிமா தான். ஆனால், சமீபகாலமாக, இந்தி திரைப்படங்கள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

சமீபத்தில், ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான சம்ஷோரா திரைப்படமும், அமீர்கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படமும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இந்த வரிசையில், தற்போது ராம் சேது என்ற திரைப்படமும் இணைந்துள்ளது. அதாவது, 90 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், 75 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்து, தோல்வி அடைந்தது. இப்படியே போனால், பாலிவுட் சினிமா மோசமான நிலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.