டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலம் (என்.சி.ஆர்) பகுதி முழுவதும் உள்ள 100 பள்ளிகளுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருமாறும், மத்திய ஏஜென்சிகளிடம் விசாரணை நடத்துமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததாக, அவை ரஷ்யாவில் இருந்து வந்திருக்கலாம் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து டெல்லி அமைச்சர் அதிஷி பேசுகையில், “இன்று காலை சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மாணவர்கள் வெளியேற்றப்பட்டு அந்த வளாகங்களில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்த ஒரு பள்ளியிலும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தேவைப்படும் இடங்களில் பள்ளி அதிகாரிகள் பெற்றோருடன் தொடர்பு கொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.