மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு தெலங்கானா தலைநகர் ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் விமானம் ராஜஸ்தான் மாநிலம் நாக்பூருக்கு திருப்பி விடப்பட்ட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்திலும், பயணிகளிடத்திலும் முழுமையான சோதனை நடைபெற்று வருகிறது. விமானத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும் சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் சோதனையில் சிக்கவில்லை என்று தெரிகிறது. இதனைத்தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் விமானம் தனது பயணத்தைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.