சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்று காலை கொல்கத்தா புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
உடனே விமானத்தில் இருந்த 182 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து விமானம் முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் விமானத்தில் இருந்து எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்த மிரட்டல் அழைப்பு வெறும் புறளி என்பது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த விமானம் கொல்கத்தாவுக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.