மதுரை அலங்காநல்லூர் வாடிப்பட்டி சோழவந்தான் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு.மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும் பாலமேடு 16ஆம் தேதியும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அலங்காநல்லூர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் இ சேவை மையங்களில் காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது.
பதிவின்போது காளை வைத்திருப்போர் ஆதார் எண் மற்றும். காளை மாட்டின் உடல் தகுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் காளைகள் பதிவு செய்யப்பட்டது.