Connect with us
Raj News Tamil

Raj News Tamil

அஜித்தை விமர்சித்த போஸ் வெங்கட் – பதிலடி கொடுத்த வில்லன்..!

சினிமா

அஜித்தை விமர்சித்த போஸ் வெங்கட் – பதிலடி கொடுத்த வில்லன்..!

மிக்ஜாங் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் விஷ்னு விஷால் மற்றும் அமீர் கான் ஆகியோரை நடிகர் அஜித், தன்னுடைய சொந்த செலவில், படகு ஏற்பாடு செய்து அவர்களை காப்பாற்றினார்.

இதனை விமர்சித்து நடிகர் போஸ் வெங்கட், ‘வெள்ளத்தில் சிக்கியிருந்த ஏழை மக்களையும் இது போன்று காப்பாற்றியிருக்கலாம்’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக துணிவு படத்தின் வில்லன் ஜான் கொக்கேன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “நாம் என்ன செய்தாலும் அதை பார்க்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்து சொல்லதான் செய்வார்கள்” என்பதை விவரிக்கும் வகையில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அஜித்தை சப்போர்ட் செய்து இவர் வெளியிட்ட இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top