கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 18-வயது இளம் பெண் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தனது பள்ளித்தோழியுடன் ஆன்லைனில் விளையாடிய போது, அப்பகுதியில் பூ கடை வியாபாரியான அபினேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் நட்பாகி ,பின்னர் காதலில் முடிந்துள்ளது.மேலும் 2-ஆண்டுகளாக இந்த ஜோடி காதலித்தும் வந்துள்ளனர்.
இந்த இளம் ஜோடிகள் தொடர்ச்சியாக காதலை வளர்க்க பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் கலர்கலராக செல்பியும்,புகைப்படமும் எடுத்து குதுகலமாக மகிழ்ந்துள்ளனர்.
இதையடுத்து காதலன் ஒருபடி மேல் சென்று காதலியின் நெஞ்சில் பச்சை குத்த சொல்லியிருக்கிறார்.அப்போதுதான் நம் காதல் உண்மையானது என்று மனதை மாற்ற முயன்றுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி பச்சை குத்த மறுத்துள்ளார். இதற்கு அந்த காதலன் தொடர்ந்து மிரட்டல் கொடுத்துள்ளார். இவன் மிரட்டுலுக்கு அஞ்சாத மாணவி காதலை break up செய்துள்ளார்.
இதனால் கோவத்தின் உச்சத்திற்கே சென்ற அபினேஷ் ஒரு கட்டத்தில் மாணவியின் வீட்டிற்கே நேரடியாக சென்று தகராறு செய்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் தந்தை இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற போலிசார் வழக்குப்பதிவு செய்து அந்த காதல் சைக்கோவை கைது செய்தனர்.