காப்பாத்துங்க காப்பாத்துங்க…! காதலியை பலவந்தமாக கடத்திய காதலன்…!

தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆடுதுறையை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்.
வேலையில்லாமல் வெட்டியாக பொழுதை கழித்த அவருக்கு, 21-வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில், காதலாக பூ பூக்கத் தொடங்கியுள்ளது. பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கையில் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்படவும், அவரது செயல் பிடிக்காமல் இருந்ததால், பழகுவதை தவிர்த்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஸ்வரன், அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பெண்ணின் பெற்றோர் ஏற்கனவே மயிலாடுதுறை போலீஸில் புகார் தந்தனர்.

அந்த புகாரின்பேரில் போலீசாரும், விக்னேஸ்வரனை அழைத்து கண்டித்துள்ளனர். மேலும் இனிமேல் அந்த பெண்ணை தொந்தரவு செய்ய மாட்டேன் என கைப்பட எழுதியும் தந்துள்ளார்.

சில நாட்கள் கடந்தவுடன் விக்னேஸ்வரன் தனது வேலையை காட்டத்தொடங்கியுள்ளார்.இதையடுத்து கடந்தமாதம் 12-ந் தேதி அந்த பெண்ணை காரில் கடத்த முயன்ற போது அப்பெண் தப்பித்து மயிலாடுதுறை போலீஸில் மறுபடியும் புகார் செய்தார்.

புகாரை ஏற்று அவரை போலீசாரும் வலைவீசி தேடிவந்தனர்.போலிசாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தார் விக்னேஸ்வரன்.

இதையடுத்து நேற்று முன்தினம் விக்னேஸ்வரன் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 15 பேர் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கார் மற்றும் பைக்குகளில் சென்று, அந்த பெண்ணை பலவந்தமாக கடத்திச்சென்றுள்ளனர்.

பின்னர் பெண்ணின் பெற்றோர் போலிசாரிடம்புகார் கொடுத்ததையடுத்து,போலிசார் வலைவீசி தேடிவந்தனர்.மேலும் இதுகுறித்து சுற்றுவட்டார காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை போலீசார் கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததுமே விக்னேஸ்வரன் காரை வேகமாக ஓட்டியுள்ளார். ஆனாலும் போலீசார் பின்தொடர்ந்து சென்று காரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் காரில் இருந்த விக்னேஸ்வரன், சுகாஷ்சந்திரபோஸ், செல்வகுமார் மற்றும் அந்த பெண் ஆகிய 4 பேரையும் மீட்டு விக்கிரவாண்டி ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.மேலும் தப்பி ஓடிய 12 பேரை தேடி வருகின்றனர்.

பெண்ணை மீட்டு தாயிடமும் ஒப்படைத்துவிட்டு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இச்செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.