ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சர்வந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி அருள். இவருடைய இரண்டாவது மகன் ராகவேந்திரா(13) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் ராகவேந்திரா கடந்த 18 ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்று உள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராகவேந்திரா இன்று மூளை சாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ராகவேந்திராவின் இருதயம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும் கல்லீரல், ஒரு சிறுநீரகம் சி.எம்.சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் அப்போலோ மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
