வித்தியாசமான கதைக்களங்களுக்கு பெயர் போனவர் என்றால் அது நம்ம மம்மூட்டி தான்.
திருநங்கையின் காதலன், ஓரிணச்சேர்க்கையாளர் என்று எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும், இமேஜ் பற்றி கவலைப்படாமல் தைரியமாக நடிக்கக் கூடிய இவர், தற்போது பிரம்ம யுகம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவான இந்த திரைப்படத்தை, ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கியிருந்தார். மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
இதன்காரணமாக, இப்படத்தை தற்போது தமிழில் டப் செய்து வெளியிடுவதற்கு, படக்குழு முடிவு செய்துள்ளதாம். எனவே, நாளை முதல் இப்படம் தமிழில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.