அரசு மருத்துவமனையில் அடாவடி வசூல்….பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்கள் அவதி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் அவரது உறவினர்களிடம் அடாவடியாக 500 முதல் 1000 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்யப்படுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

பணத்தை தராவிட்டால் கர்ப்பிணிப் பெண்களை பார்க்க கூட அனுமதிக்க முடியாது என மருத்துவமனை ஊழியர்கள் மிரட்டுவதாக உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதோடு கர்ப்பிணி பெண்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் தங்குவதற்கு இடம் இல்லாததால் மருத்துவமனை காம்பவுண்டு அருகில் குப்பைகளுக்கு மத்தியில் காத்து கிடக்கின்றனர்.

குழந்தைகளை மரக்கிளைகளில் தொட்டில் கட்டி உறங்க வைக்கின்றனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உடனடியாக ஜெனரேட்டர் ஆன் பண்ணுவதில்லை என்றும் மருத்துவமனை மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கர்ப்பிணி பெண்களுக்கு ஆபரேஷன் செய்வதற்கு முன்னால் பிளட் டெஸ்ட் எடுத்து உறவினர்களிடமே கொடுத்து அருகில் உள்ள லேபிற்கு சென்று அரை மணி நேரத்திற்குள் ரிசல்ட் வாங்கி வரும் மாறும் தெரிவிக்கின்றன. உறவினர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவிர்த்து வருவதாகவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனை மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் இந்த செயலால் என்ன செய்வது என தெரியாமல் பாமர மக்கள் விழி பிதுங்கி உள்ளனர். அரசு மருத்துவமனையில் நடைபெறும் இந்த லஞ்ச புகார் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு அரசு சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் பாமர மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

RELATED ARTICLES

Recent News