இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாலியல் சீண்டலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.