புரூஸ்-லீ இறந்தது இப்படிதான்? 50 வருடங்களுக்கு பின் வெளியான அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவின் காலிஃபோர்னியாவில் பிறந்தவர் புரூஸ்-லீ. சீன வம்சாவளியை சேர்ந்த இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மூலம், குங்ஃபூ என்ற கலையை உலகறிய செய்தவர்.

உலகின் பலசாலிகளில் ஒருவராக விளங்கிய புரூஸ்-லீ, தனது 32-வது வயதில் மரணமடைந்தார். இது, பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், பலர் கூறி வந்தனர்.

இந்நிலையில், இவரது மரணம் குறித்து, கிளினிக்கல் கிட்னி ஜர்னல் என்ற நிறுவனம், ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது. அதில், உடற்பயிற்சி கடுமையாக செய்வதால், புரூஸ்-லீ அதிகமாக தண்ணீர் குடித்துள்ளார்.

அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல், அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மூளையில் வீக்கம் ஏற்பட்டு, அவர் உயிரிழந்திருக்கலாம் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.