சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் பிரேம்குமார். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக பிரேம்குமார், நரேஷ் வசந்தகுமார் ஆகியோர் ஆஜராகியுள்ளனர். அதன் பின்னர் சென்னை பெரிய மேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுபான பாரில் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் உள்ளே சென்று மது அருந்தி கொண்டிருந்த பிரேம்குமார் உள்ளிட்ட மூன்று பேரை அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்கினர். அதில் தப்பிக்க முயற்சித்த பிரேம்குமார் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விழுந்தார்.
பிரேம் குமாரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவருடன் இருந்த நரேஷ் மற்றும் வசந்த் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்து படுகாயத்துடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்ட பகலில் நடந்த இந்த கொடூர கொலை குறித்து பெரியமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.