குஜராத் மாநிலம் நடியாட் பகுதியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு, 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார். அந்த 15 வயது சிறுமிக்கு, அவர் படிக்கும் பள்ளியில் சக மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த மாணவன், மாணவியின் ஆபாச வீடியோவை, இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர், மாணவனின் வீட்டிற்கு சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அந்த சிறுவனின் பெற்றோர், உரிய பதில் ஏதும் வழங்காமல், பாதுகாப்பு படை வீரரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த பாதுகாப்பு படை வீரர், மாணவனின் வீட்டின் முன்பு போராட துவங்கியுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த மாணவனின் பெற்றோர், பாதுகாப்பு படை வீரரை அடித்தே கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அப்பகுதி காவல்துறையினர், தப்பி ஓடிய, மாணவனின் பெற்றோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை, வழக்கில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.