கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்பு பணிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில், வயநாடு மாவட்டம் மற்றும் நிலம்பூர் தாலுக்காவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மூன்று நாட்களுக்கு இலவச வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா பயன்பாட்டு வசதியை வழங்குவதாக BSNL அறிவித்துள்ளது.
சூரல்மாலா மற்றும் முண்டக்கை கிராமங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இலவச மொபைல் இணைப்பை பிஎஸ்என்எல் வழங்குகிறது.