Connect with us

Raj News Tamil

நடப்பாண்டின் இடைக்கால பட்ஜெட்! – முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

இந்தியா

நடப்பாண்டின் இடைக்கால பட்ஜெட்! – முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் எனவும் வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும் எனவும் கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் எனவும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும், பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும், தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்குவதற்காக ஒரு லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும் எனவும், தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தகத் திட்டங்களை ஊக்குவிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 40 ஆயிரம் சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இது வருமான வரி செலுத்துவோருக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

More in இந்தியா

To Top