நாற்காலிகளை காப்பாற்றும் வகையில் பட்ஜெட் தாக்கல்: ராகுல் காந்தி!

நாற்காலிகளை காப்பாற்றும் வகையில் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,

“நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது.

சாமானிய இந்தியர்கள் எவ்வித பலனும் இல்லாத வகையில், ஏஏ-வுக்கு (AA -அம்பானி, அதானி) பலன் தரும் விதமாக உள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகளை நகலெடுத்து ஒட்டியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News