சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரன் தெருவில் பழமையான நான்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வந்த நிலையில் திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை வெளியான தகவல் படி இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தக் கட்டிடத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வேலை செய்து வந்ததாகவும் ராயல் பைக் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் பரத் என்பவர் இந்த கட்டிடத்தின் சொந்தக்காரர் என தெரிகிறது.
ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்த கட்டிடத்தை சீரமைக்கும் பணியின் பொழுது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. போதுமான பாதுகாப்பு இன்றி இந்த கட்டிடம் பழுது பார்க்கும் பணி நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்து கட்டிட உரிமையாளர் பரத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி வரும் சென்னை பாரிமுனையில் திடீரென 4 மாடி கட்டிடம் இருந்து விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..! pic.twitter.com/wDwb4nAqEf
— Raj News Tamil (@rajnewstamil) April 19, 2023