55 அகதிகளுடன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி 16 பேர் உயிரிழந்தனர்.
மெக்ஸிகோவில் வுஹாக்கா மாகாண நெடுஞ்சாலையில் 55 அகதிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பேருந்தில் இருந்தவர்கள் வெனிசூலா, ஹைட்டி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்கு அடைக்கலம் தேடிச் செல்லும் ஏராளமானவா்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு சட்டவிரோத அகதிகள் கடத்தல்காரா்கள் ஆபத்தான போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தி அழைத்துச் செல்வது வழக்கம். இதனால் ஏராளமான அகதிகள் உயிரிழந்து வருகின்றனா்.