பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி சென்ற பேருந்து மத்திய ஈரானில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 14 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்தின் பிரேக் செயலிழந்ததாலும், ஓட்டுநரின் அலட்சியத்தாலும் விபத்து ஏற்பட்டதாக ஈரானின் அரசு தெரிவித்துள்ளது.