தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் செல்போன் கடைக்காரர் ஒருவர் ஒரு ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 2 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார்.
தக்காளியின் விலை அதிகரித்துள்ளதால் தக்காளியை இலவசமாக கொடுக்கும்போது வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிகிறது என்றும் இது ஒரு நல்ல வியாபார யுக்தி எனவும் அவர் கூறியுள்ளார்.