Bye Bye.. மிஸ் யூ ரம்மி! என கடிதம் எழுதிவிட்டு வாழ்க்கையை முடித்த இளைஞர்…!

நாமக்கல் அருகே ஆன்லைன் விளையாட்டால் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். B.COM படித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றித் திரிந்த இவர், ஆன்லைனில் ரம்மி விளையாட தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த சுரேஷ், பின் அந்த விளையாட்டிற்கு அடிமையாக மாறியுள்ளார்.

தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டிலேயே மூழ்கியிருந்த சுரேஷ், சுமார் 5-லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த பணத்தையும், உறவினர்கள், நண்பர்களிடம் கடனாக பெற்ற பணத்தையும் ஆன்லைன் ரம்மியிலேயே இழந்துள்ளார்.

இதன்காரணமாக, கடந்த சில நாட்களாகவே, விரக்தியில் இருந்து வந்த சுரேஷ், Bye Bye மிஸ் யூ ரம்மி என கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாழ வேண்டிய வயதில், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதால், இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News