பொதுவாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இறக்க நேர்ந்தாலோ, பதவி விலகினாலோ அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், நடக்க இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதாவது, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், பீகார் மாநிலத்தில் உள்ள ரூபாலி, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ராய்காஞ்ச், ரனாகத் தக்ஷின், பாக்டா மற்றும் மணிக்டலா, தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்வாரா, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத், மங்களூர், பஞ்சாபில் உள்ள மேற்கு ஜலந்தர், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தேஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், வரும் ஜூலை 10-ஆம் தேதி அன்று, நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 21 என்றும், வேட்பு மனு பரிசீலனை ஜூன் 24-ஆம் தேதி என்றும், வேட்புமனுவை திரும்பி பெறுவதற்கான கடைசி தேதி ஜூன் 26 என்றும், கூறப்பட்டுள்ளது. ஜூலை 13-ஆம் தேதி அன்று, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.