தமிழக தொழில்துறை சார்பில் வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக அனைத்து அமைச்சருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 6.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.