முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்குகிறது.
தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனாவும், தொழில் துறை அமைச்சராக டி.ஆா்.பி.ராஜாவும் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், தொழில் துறை தொடா்பான சில முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் தற்போதைய நிலை தொடா்பாகவும், மகளிருக்கென பிரத்யேகமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.