சூறாவளியால் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா – 3.5 கோடி பேர் பாதிப்பு..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சூறாவளி காற்று மற்றும் கனமழையால் மக்கள் அதிகம் பாதிப்பட்டுள்ளனர்.

பலத்த காற்றின் வேகத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மேலும் மின் இணைப்புகளும் சேதமடைந்தன.

இந்த கனமழையால் 3.5 கோடி பேர் பாதிப்பட்டுள்ளனர். 1.2 லட்சம் வீடுகளுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

பொது பணி துறை ஊழியர்களை அடுத்த 2 வாரங்களுக்கு 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்கும்படி அரசு கூறியுள்ளது. பனிக்கட்டிகளை நீக்குவது, புயலை முன்னிட்டு ரோந்து பணி மேற்கொள்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.