ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் Trial Room-ல் கேமரா! அலறிய இரண்டு பெண்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் என்ற பிரபல துணிக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் துணி வாங்குவதற்காக, இரண்டு பெண்கள் நேற்று இரவு வந்திருந்தனர்.

அப்போது, இரண்டு பெண்களும் தாங்கள் வாங்கிய உடைகளை, ட்ரையல் ரூமுக்கு சென்று அணிந்து பார்த்துள்ளனர். ஆனால், ஏதோ விநோதமாக இருப்பதை உணர்ந்த அவர்கள், அறையின் உள்ளே பரிசோதனை செய்துள்ளனர்.

இதில், அறையின் மேல் பாகத்தில், கேமராக்கள் இருப்பதை அறிந்தபின், அந்த பெண்கள் இருவரும், அலறியடித்துக் கொண்டு, அங்கிருந்து வெளியே வந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வெளி நபர்களின் மூலம் கேமரா வைக்கப்பட்டதா? அல்லது ஊழியர்கள் மூலம் கேமரா வைக்கப்பட்டதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News