விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப். 19-ம்தேதி பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மூன்று அடுக்கு பாதுகாப்புடன் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றுகாலை 9.30 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. அப்போது,யுபிஎஸ்-ல் ஏற்பட்ட பழுதுகாரணமாக சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின் சாதனங்கள் இயங்கவில்லை.
இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி, மாவட்டகாவல் கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாட்ச் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பழுது சரி செய்யப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக் கப்பட்டுள்ள அறையில் மின் பழுது ஏற்படாத வகையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.