சீனாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரனா காரணமாக பல்வேறு நாடுகள் மாபரும் பாதிப்புக்குள்ளாகியது.குறிப்பாக சீனாவிற்கு பிற நாட்டு மக்கள் வருகையும்
அதன் பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் இலங்கை போன்ற சில நாடுகள் விசா இல்லாமல் தங்கள் நாடுகளுக்கு வரலாம் என்று அனுமதியளித்தது.
இதை மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவும் கையெளுட்டுத்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதித்துள்ளது.
சீனா அரசாங்கம் இப்படி அறிவித்துள்ளதுக்கு சுற்றுலா நேசிகள் பலரும் உற்சாகமடைந்தாலும். அங்கு நிமோனியா காய்ச்சலின் பரவல் அதிகமாக இருப்பதால் அச்சமும் அடைந்துள்ளனா்.