“என்னை வேலைக்கு எடுத்தால் ரூ.40 ஆயிரம் தறேன்..” – ஐ.டி. கம்பெணி நிறுவனருக்கு மெசேஜ் அனுப்பிய நபர்!

இந்தியாவின் சிறந்த ஐடி கம்பெணிகளில் ஒன்று விங்கிஃபை ( Wingify ). இந்த நிறுவனத்தை நிறுவியவர் பராஸ் சோப்ரா.

டெல்லி பொறியியல் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற இவர், போர்ப்ஸ் பத்திரிக்கையில், 30 வயதில் சாதனை படைத்த 30 பிரபலங்களின் பட்டியலில், இரண்டு முறை இடம் பெற்றிருந்தவர்.

விங்கிஃபை மட்டுமின்றி, Nintee மற்றும் VWO ஆகிய நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், வேலை வேண்டும் என்று ஒருவர் அனுப்பிய வித்தியாசமான மெசேஜ் குறித்து அவர் பேசியுள்ளார்.

அதாவது, “நான் விங்கிஃபை நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும். என்னை நீங்கள் பணியில் அமர்த்துவதற்கு, நான் உங்களுக்கு 500 ( 41 ஆயிரம் ரூபாய் ) டாலர் பணத்தை கொடுக்கிறேன்.

ஒரு வாரத்தில், நான் சிறப்பான பணியாளர் என்பதை நிரூபிக்கவில்லை என்றால், நீங்கள் என்னை பணியில் இருந்து நீக்கிவிடுங்கள். அந்த பணத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களது நேரத்தை வீணாக்க மாட்டேன்” என்று ஒருவர், பராஸ் சோப்ராவிற்கு, மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இந்த மெசேஜின் ஸ்க்ரீன் ஷாட்டை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “இப்படி தான் கவனத்தை ஈர்க்க வேண்டும். கண்டிப்பாக பணத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன், ஆனால், இவரது அனுகுமுறை ஈர்த்துவிட்டது” என்று கூறியிருந்தார்.

RELATED ARTICLES

Recent News