காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்னைகளை தீர்த்துவைக்க காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது என்றும் மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
மேலும் தமிழகத்திற்குத் தேவையான காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தில்லியில் ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “போதிய மழை பெய்யாததால் தண்ணீரை திறக்க முடியவில்லை. கேரளா மற்றும் குடகு மாவட்டத்தில் மிகக் குறைவான அளவே மழை பெய்துள்ளது. மிகக்குறைவான அளவு மழை பெய்துள்ளதால் கர்நாடகாவில் போதிய அளவு தண்ணீர் இல்லை” என்றார்.