மார்வெல் நிறுவனத்தின் மிகவும் முக்கியமான படைப்புகளில் ஒன்று கேப்டன் மார்வெல்.
இந்த திரைப்படத்தில், ஜோசப் டேன்வெர்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் கென்னத் மிட்செல். கனடிய நடிகரான இவர், தி ஸ்டார் ட்ரெக் : டிஸ்கவரி என்ற தொடரிலும், அசத்தியுள்ளார்.
கடந்த 5 வருடங்களாக நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலன் இன்றி, இன்று உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
