அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், நிவேதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் கேப்டன் மில்லர் படம் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.