சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாதியை பார்த்த ரசிகர்கள், அருமையாக உள்ளது என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் தயாரிப்பாளர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளிலும், கேப்டன் மில்லர் படத்தின் டீசரை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, படத்தின் இடைவேளை நேரத்தில், கேப்டன் மில்லர் டீசர் திரையிடப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.