Connect with us

Raj News Tamil

கேப்டன் மில்லர் திருட்டுக் கதையா? அதிர்ச்சி தகவல்!

சினிமா

கேப்டன் மில்லர் திருட்டுக் கதையா? அதிர்ச்சி தகவல்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில், இப்படம் கதை திருட்டு சம்பவத்திலும் சிக்கியுள்ளது.

அதாவது, பிரபல எழுத்தாளர் வேல ராமமூர்த்தி பட்டத்து யானை என்ற நாவலை உருவாக்கியிருந்தார். அந்த நாவலின் கதையை வைத்து தான், இந்த திரைப்படம் உருவாகியிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இதுதொடர்பாக, இயக்குநர் கீரா, ப்ளு சட்டை மாறன் ஆகியோர் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top