Connect with us

Raj News Tamil

கேப்டன் மில்லர் படத்தை வெளியிடுவது யார்?

சினிமா

கேப்டன் மில்லர் படத்தை வெளியிடுவது யார்?

திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய 2 வெற்றிப் படங்களை கொடுத்துள்ள தனுஷ், தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ள இப்படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும், சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளனர்.

இப்படம், வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை, லைக்கா நிறுவனம் பெற்றுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top