ராக்கி, சானிக் காயிதம் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அருன் மாதேஸ்வரன். இந்த படங்களுக்கு பிறகு, தனுஷை ஹீரோவாக வைத்து, கேப்டன் மில்லர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சுந்தீப் கிஷன், சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், தனுஷின் பிறந்த நாளையொட்டி, கேப்டன் மில்லர் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
இந்த டீசரில் இடம்பெற்றிருந்த காட்சிகள் அனைத்தும், ஆங்கில படங்களுக்கு நிகராக உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதன்காரணமாக, படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.