நாளை நடைபெறுகிறது கேப்டனின் இரங்கல் கூட்டம்..!

நடிகரும், தேமுதிக கட்சியின் பொதுசெயலாளருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது நடிகர் சங்கக் கடன்களை அடைத்ததில் பெரும் பங்காற்றியவர் நடிகர் விஜயகாந்த். இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை, காமராஜர் அரங்கில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ளும்படி நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அதன் தலைவர் நாசர் வீடியோ ஒன்றின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த இரங்கல் கூட்டத்தில் அனைத்து நடிகர்களும், நடிகைகளும் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News