கார் மரத்தில் மோதி விபத்து: 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து அப்துல் ரஹ்மான் குடும்பத்தினர் 12 பேருடன் காரில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

கார் வனபர்த்தி மாவட்டம் கொத்தகோட்டா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.

உடனடியாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அப்துல் ரஹ்மான் (62), சலிமா ஜி (85), குழந்தைகள் புஸ்ரா (2), மரியா (5) மற்றும் வாசிர் ராவுத் (7 மாதங்கள்) சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேலும் ஏழு பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் சமீரா (5), உசேன் (10), ஷாபி, காதிருன்னிசா, ஹபீப், அலி மற்றும் ஷாஜஹான் பெய்க் ஆகியோர் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கர்னூல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த காரில் 12 பேர் பயணித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதிகாலை 3 மணி அளவில் கார் ஓட்டி வந்த டிரைவர் தூங்கியதால் சாலையின் டிவைடர் மோதி கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் முதற்கட்டமாக விசாரனையில் தெரிய வந்துள்ளது.

அதிவேகமாக மரத்தில் மோதியதில் காரின் முன்பகுதி முற்றிலும் நசுங்கியது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News