Connect with us

Raj News Tamil

தாறுமாறாக சென்ற கார்…தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

இந்தியா

தாறுமாறாக சென்ற கார்…தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

புதுச்சேரி, பாண்டி மெரினாவில் நேற்று இரவு 9.30 மணியளவில் புதுச்சேரி பதிவெண் கொண்ட கார் ஒன்று வேகமாக வந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இந்த கார் திடீரென்று தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு கட்டையில் மோதி தலைக்கீழாக கவிழ்ந்து விழுந்தது.

இதில் காரில் பயணித்த ஒரு பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் காரை நிமிர்த்தி அவர்களை காப்பாற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரவு நேரத்தில் கார் மற்றும் பைக்கை வேகமாக ஓட்டுவது இப்பகுதியில் அடிக்கடி நடைபெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என அப்பகுதியில் கோரிக்கை வைக்கின்றனர்.

More in இந்தியா

To Top