சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் நாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக கடந்த 2 தினங்களாக தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் மர்ம நபர்கள் நாயை கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் நாயை வீசிய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குடிநீர் தொட்டியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.