சென்னை விமான நிலையத்தில் புதிதாக ஆறு அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது
அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் பார்க்கிங் பகுதியில். மின்சார வாகனங்களும் நிறுத்தலாம். அதற்கு சார்ஜ் ஏற்றுவதற்கான கருவிகளும், கார் பார்க்கிங்கில் அமைக்கப்பட்டுள்து.
இந்த நிலையில் நான்காவது தளத்தில் இருந்து தரை தளத்திற்கு இறங்கிய காரும் தரை தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு சென்ற காரும் மோதி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அதிர்ஷ்ட வசமாக ஓட்டுனர் தவிர வாகனத்தில் பயணிகள் இல்லாததால் இழப்புகள் ஏற்படவில்லை. மோதிய வேகத்தில் நான்காவது தளத்தில் பக்கவாட்டு சுவரில் மோதி கார் நின்றது.
முறையான தடுப்புகள் இல்லாமல் இருப்பதால் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதியில் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் இது போன்ற விபத்துகளும் நடைபெறுகிறது.
இது குறித்து வாகன ஓட்டுனர்கிடம் கேட்ட போது முறையான எச்சரிக்கை பலகைகள் இல்லை எதிரில் வரும் வாகனங்கள் திரும்பும் பகுதியில் தெரியவில்லை எனவும் வாகனங்கள் மேலே செல்லவும் இறங்கவும் ஒரே பகுதி பயன்படுத்தப்படுவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவித்தனர்.
வாகன ஓட்டுனர்கள் இது குறித்து பலமுறை பாதுகாப்பு அதிகாரியான பார்தீபனிடம் தெரிவித்தும் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கார் பார்க்கிங் பகுதியில் மோதிக் கொள்ளும் கார்கள் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு #RajNewsTamil #ChennaiAirport #viralvideo pic.twitter.com/NDJjGhxw8e
— Raj News Tamil (@rajnewstamil) June 6, 2023