திமுக சார்பாக சென்னையில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது டெங்கு, மலேரியா போன்று சனாதனமும் ஒரு கிருமி எனப் பேசினார்.
இதையடுத்து உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவிக் கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி பரிசு அளிப்பதாக கூறினார். மேலும் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் குத்தி எரித்தும் மிரட்டல் விடுத்து இருந்தார்.
இந்நிலையில் மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சீர் ராமச்சந்திர தாஸ் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா மீது, 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுகவைச் சேர்ந்த மதுரை மாநகர வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் தேவசேனன் என்பவர் அளித்த புகாரின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.