இயக்குநர் மணிரத்னம் மீதான வழக்கு தள்ளுபடி..!

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 2,000 திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாற்றை திரித்து எடுத்ததாக மணி ரத்னம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மணி ரத்னம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.